நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறை ரூ.33,638 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயான ரூ.29,417 கோடியைவிட 14.35 விழுக்காடு அதிகமாகும்.
நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 534.60 மில்லியன் டன் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 6.45 விழுக்காடு கூடுதலாகும்.
கடந்த மாதத்தில் மட்டும் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.4,082 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31.33 மில்லியன் டன் நிலக்கரி எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,658 கோடியும், ஏற்றுமதி இரும்புத்தாது மூலம் ரூ.499 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.