மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை இன்டர்போல் அமைப்பின் தலைவர் ரொனால்ட் கே.நோபல் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் பெயர், கைரேகை, டி.என்.ஏ. தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை இன்டர்போல் அமைப்பின் சர்வதேச தகவல்-புள்ளி விவர மையத்தில் ஒப்பிட்டு பார்த்து, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், பிடிபட்ட பயங்கரவாதி தொடர்பான தகவல்களை தருவதாக சிதம்பரத்திடம் நோபல் உறுதியளித்தார்.
மேலும், இன்டர்போல் அமைப்பில் உள்ள 186 நாடுகளுக்கும் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு இன்டர்போல் உதவி செய்யும் என்றும் நோபல் தெரிவித்தார்.