ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 13 பேர் இன்று ப்தவியேற்றுக் கொண்டனர்.
இந்த மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து முதல்வராக அசோக் கெலாட் கடந்த 13ஆம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், அவரது அமைச்சரவையில் 13 பேரை அமைச்சர்களாகத் தேர்வு செய்தார் கெலாட்.
ஜெய்ப்பூரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 13 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஷிலேந்திர குமார் சிங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்றுக் கொண்டவர்களில் 11 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 2 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். பதவியேற்பு விழாவில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.