ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது என்று பாதுகாப்புத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணை, இந்திய - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவானதாகும்.
இந்த ஏவுகணைச் சோதனையை இந்தியப் பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள் நேரில் பார்வையிட்டனர்.