முன்னாள் மத்திய அமைச்சர் வி.பி. கோயல் மரணம்

வியாழன், 18 டிசம்பர் 2008 (14:15 IST)
பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான வேத பிரகாஷ் கோயல் நேற்றிரவு மும்பையில் காலமானார். அவருக்கு வயது 82.

வயோதிகத்தால் அவரது உயிர் பிரிந்ததாகவும், அவருக்கு சந்திரகாந்தா கோயல் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சந்திரகாந்தா மகாராஷ்டிர மாநில சட்டசபையில் முன்னாள் உறுப்பினராக இருந்தவர்.

தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான வி.பி. கோயல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2001 முதல் 2003ஆம் ஆண்டு வரை மத்திய கப்பல் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். பாஜகவின் பொருளாளராகவும் இருந்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்