சத்தீஷ்கர் மோதலில் 2 நக்சலைட்டுகள் பலி
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (14:56 IST)
சத்தீஷ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாராயண்பூர் மாவட்டத்தில் கம்கானார் என்ற கிராமத்தில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல்படை, மாவட்டக் காவல்படை ஆகியோர் மீது, வனத்தில் மறைந்திருந்த நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர் என்றும், இதையடுத்து பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர் என்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஜய் யாதவ் தெரிவித்தார்.
இந்த எதிர்த் தாக்குதலில் நக்சலைட்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், கையேறி குண்டுகள், புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.