தபால் ஊழியர்கள் டிச.17 முதல் வேலை நிறுத்தம்

வியாழன், 11 டிசம்பர் 2008 (19:06 IST)
புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உ‌‌ள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தபால் ஊழியர்கள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

சோனேப‌ட் நக‌ரி‌ல் இ‌ன்று, அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.எஸ். மகாதேவாராயா செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்தா‌ர். அ‌‌ப்போது அவ‌ர் கூ‌றுகை‌யி‌ல், தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மே‌லு‌ம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16ஆம் தேதி விளக்குகளை ஏந்தி பேரணி நடத்த போவதாகவு‌ம் கூறினார்.

ஊழியர்கள் அந்தந்த தபால் அலுவலகம் முன்னர் பேரணி, ஆர்ப்பாட்டங்களை ‌தினமு‌ம் நடத்துவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று‌ம் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்