த‌மிழக‌த்‌‌தி‌ல் 13 உ‌ள்பட 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி!

புதன், 3 டிசம்பர் 2008 (17:40 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் 13 ‌மி‌ன்‌ தி‌ட்ட‌ங்க‌ள் உ‌ள்பட நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு ப‌கு‌திக‌ளி‌ல் 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் 500 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் கொ‌ண்ட ஒரு ‌நீ‌ர் ‌மி‌ன்‌தி‌ட்ட‌ம், 3,085 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌‌ன் கொ‌ண்ட 12 ‌அ‌ன‌ல் மி‌ன்‌தி‌‌ட்ட‌ங்க‌ள் உ‌ள்பட மொ‌த்த‌ம் 13 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச் சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

கட‌ந்த 3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 128 அன‌ல் ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள், 39 ‌‌நீ‌ர் ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள், ஒரு அ‌ணு ‌மி‌ன் ‌தி‌ட்ட‌‌ம் உ‌ள்பட மொ‌த்த‌ம் 168 ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு ம‌த்‌திய அரசு சு‌ற்று‌ச்சூழ‌ல் அனும‌தி வழ‌ங்‌கியு‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்