ரயில்வேத் துறையின் நிதி ஆணைய‌ர் பொறு‌ப்பே‌ற்பு!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:44 IST)
ரயில்வேத் துறையின் நிதி ஆணையராக சௌ‌ம்யா ராகவன் பொறுப்பே‌ற்றுக் கொண்டார்.

இதற்கு முன் இவர் மத்திய ரயில்வேயின் பொது மேலாளராகவும், ரயில்வே வாரியத்தின் நிதி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய ரயில்வே கணக்காயர் பணியின் 1973ஆம் ஆண்டை சேர்ந்த இவர், மத்திய ரயில்வேயின் முதல் பெண் பொது மேலாளராகவும், பெங்களூரு ரயில்வே மண்டலத்தின் முதல் பெண் மண்டல மேலாளராகவும் பணிபுரிந்தவர். தெற்கு ரயில்வே உ‌ள்பட ரயில்வேக்களின் பல பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்