மிசோரம் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (11:02 IST)
மிசோரம் சட்டப்பேரவைக்கு 40 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள 6,11,124 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய ஏதுவாக 1,026 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் 9 பெண் வேட்பாளர்கள், 36 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு அம்மாநிலத்தையொட்டி உள்ள மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கியது. மொத்தம் 1,098 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்