ஷிவ்ராஜ் பாட்டீல் பதவி விலக முடிவு

ஞாயிறு, 30 நவம்பர் 2008 (14:59 IST)
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டீல், தனது பதவியில் இருந்த விலக முடிவு செய்திருப்பதாக நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு புதுடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாட்டீல், மத்திய உள்துறை அமைச்சர் என்ற வகையில் இந்த தாக்குதலுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். காங்கிரஸ் செயற்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து பல்வேறு தரப்பினரும் கூறும் விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலக தாம் தயாராக இருப்பதாகவும் ஷிவ்ராஜ் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் கலந்து கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்