மும்பை தாக்குதல்: பிரதமரின் டெல்லி பிரசாரம் ரத்து!

வியாழன், 27 நவம்பர் 2008 (11:57 IST)
மும்பையில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ‌பிரத‌ம‌ர் மன்மோகன் சிங் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம் சிங்கிற்கு ஆதரவாக பிரதமர் இன்று பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் நேற்றிரவு மும்பையில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

டெல்லியில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்