செல்பேசி சந்தாதாரர்கள் எண்ணை மாற்றாமல் தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (23:29 IST)
தற்போதுள்ள செல்பேசி சந்தாதாரர்கள் ஒரு தொழில்நுட்பத்தில் இருந்து வேறு ஒரு தொழில்நுட்பத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும், ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் போதும் தங்களது செல்பேசி எண்ணை மாற்றிக் கொள்ளாமல் தக்க வைத்துக் கொள்ளும் தொழில்நுட்பத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை வரவேற்றுள்ளது.
இதுபோன்ற வசதிகளை அளிப்பதற்கான நிறுவனங்கள் 1956 நிறுவன விதி சட்டத்தின்படி தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் இதற்கான விண்ணப்பம் புதுடெல்லியில் உள்ள சஞ்சார் பவனில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.50 ஆயிரம் வரைவோலையை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.