நிலக்கரி உற்பத்தி 9.57% அ‌திக‌ரி‌ப்பு!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (18:35 IST)
நில‌க்க‌ரி உ‌ற்ப‌த்‌தி இ‌ந்ஆ‌ண்டு 9.57 சத‌வீத‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேனி நிலக்கரி தொழிற்சாலஆகியவகட‌ந்த அக்டோபர் மாதம் 37.31 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன. இதற்கான இலக்கு 37.71 மில்லியன் டன்னாகும்.

இந்த நிறுவனங்கள் இணைந்து 2007-ம் ஆண்டு 34.05 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 9.57 சதவீதம் உற்பத்தி உயர்ந்தது. மின்சாரத் தேவைக்காக சென்ற மாதம் 27.77 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

2008-09-ம் ஆண்டு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேனி நிலக்கரி நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்காக ரூ.6,597 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற மாதம் முடிய ரூ.1,806.64 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நிலக்கரியை மின்னணு முறையில் ஏலம் விடும் பணியை இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கொண்டது. இதில் சுமார் 32.26 லட்சம் டன் நிலக்கரி ஏலம் விடப்பட்டது. ஆயினும் நிலக்கரி நிறுவனங்களுக்கு சுமார் 40.1 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

நிலக்கரியைப் பயன்படுத்தி சென்ற மாதம் 1,171.71 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கான இலக்கு 1,075 மில்லியன் யுனிட் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்