இந்தியா - பாகிஸ்தான் இ‌ன்று பேச்சுவார்த்தை!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (05:58 IST)
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, உள்துறை செயலர்கள் அளவிலான 5-வது சுற்று பேச்சுவார்த்தை பா‌கி‌ஸ்தா‌‌ன் தலைநக‌ர் இஸ்லாமாபாத்தில் இ‌ன்று நடைபெறுகிறது.

எல்லைப்புற வர்த்தகத்தை ஊக்குவிப்பது, தீவிரவாதம், போதைப் பொருள்கள் கடத்தலை தடுப்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் இப்பேச்சுவார்த்தைகளின் போது இடம் பெறு‌‌‌ம்.

இந்தியாவின் சார்பில் மத்திய உள்துறை செயலர் மது‌க்கர் குப்தா, பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு உள்துறை செயலர் சையது குமார் ஷா ஆகியோர் இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

புதுடெ‌ல்‌லி‌யி‌ல் கட‌ந்த ஆண்டு ஜுலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உள்துறை செயலர்களிடையேயான பேச்சு வார்த்தை நடைபெற்றது எ‌ன்பது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்