போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை - ரனில் விக்ரமசிங்கே!

புதன், 19 நவம்பர் 2008 (05:19 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் - சிறிலங்க ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை என்று இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரனில் விக்ரமசிங்கே, அயலுறவு முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரனில், இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும். தற்போது இலங்கையில் நிலவும் சூழலில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.

ஜஸ்வந்த் சிங்கை அடுத்து, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இலங்கை‌யி‌ல் நிலவும் சூழ்நிலை குறித்து ர‌னி‌ல் ‌வி‌க்ரம‌சி‌ங்கே பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்