இந்தியா-மலேசியா இடையே கூடுதல் விமான போக்குவரத்து!

திங்கள், 17 நவம்பர் 2008 (23:49 IST)
இந்தியா - மலேசியா இடையே விமான போக்குவரத்து சேவையை அ‌திக‌ரி‌‌ப்பது எ‌ன்று இருநாட்டு பிரதிநிதிகள் குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விமானத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையே விமான சேவையை ஒழுங்குபடுத்தி நவீனப்படுத்துவது அவசியமான நிலையில், இந்தியா, மலேசிய நாட்டு பிரதிநிதிகள் புதுடெல்லியில் சந்தித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலேசானை நடத்தினர். இதனடிப்படையில்,

எதிர்வரும் 2009 ஆண்டு கோடை காலத்திலிருந்து இந்திய-மலேசிய நாட்டு விமான நிறுவனங்கள் தத்தம் வழிகளில் வாரத்திற்கு 20,410 இருக்கைகள் வரை விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் மலேசிய நாட்டு விமான நிறுவனங்கள், வாரத்திற்கு ெல்லி மார்க்கமாக 5,620 இருக்கைகள், மும்பை மார்க்கமாக 3,770 இருக்கைகள், சென்னை மார்க்கமாக 4,740 இருக்கைகள், கொல்கத்தா மார்க்கமாக 1,000 இருக்கைகள், பெங்களூரு மார்க்கமாக 2,730 இருக்கைகள் மற்றும் ஐதராபாத் மார்க்கமாக வாரத்திற்கு 2,550 இருக்கைகள் அளவுக்கு விமானங்களை இயக்கிக் கொள்ளலாம்.

மேலும், மலேசிய தரப்பின் வேண்டுகோளை ஏற்று மும்பையிலிருந்து (செ‌ல்வத‌ற்கு‌ம்-வருவத‌ற்கு‌ம்) விமான சேவையை நடத்துவதற்கு கொல்கத்தாவில் பயன்படுத்தப்படாத உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள இந்திய தரப்பு அனுமதி அளித்துள்ளது. வேறு எந்த உரிமைகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்த வரையறைக்குள் 2-வது விமான நிறுவனம் ஒன்று, சேவையை துவக்கிக் கொள்ள இந்திய தரப்பிற்கு ஒத்துழைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருத்தியமைக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கையின்படி மலேசியாவிலிருந்து மும்பை, ெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி போக்குவரத்து சேவையை மற்றொரு நிறுவனம் துவக்கி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இருநாட்டு விமான நிறுவனங்களும் B747-400 ரக விமானங்களுக்கு மிகாமல், அனைத்து ரக விமானங்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்