நட்வர் சிங் மகன் பாஜக-வில் இணைந்தார்!

திங்கள், 17 நவம்பர் 2008 (15:21 IST)
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் இன்று பாஜக-வில் இணைந்தார்.

சட்டமன்ற உறுப்பினரான ஜகத் சிங், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பாஜக-வில் இணைந்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் உட்பட பல தலைவர்களும் உடனிருந்தனர்.

ஆழ்வார் மாவட்டம் லட்சுமண் கார் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய்க்குப் பதிலாக உணவு தானியங்கள் வழங்கும் திட்ட முறைகேட்டில் நட்வர் சிங்கிற்குத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்தார். இந்நிலையில் திடீரென்று பாஜகவில் இணைந்துள்ளார்.

ஆனால் அவரது தந்தை நட்வர் சிங் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியில் நீடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்