உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட செய்தியில், மீரட் நகரின் ஹப்பூர் சாலையில் உள்ள சாகீர்நகர் பகுதியில் மாலை 4 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் 5 முதல் 6 பேர் உயிரிழந்து அல்லது காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை என ஒரு தரப்பினர் கூறினாலும், அப்பகுதியில் உள்ள குப்பை பொறுக்கும் சிலர் ஒரு பொருளை திறக்க முயன்ற போது குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதலா என்பது முழு விவரங்கள் கிடைத்த பின்னரே உறுதி செய்ய முடியும்.