மும்பை விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை!

மும்பை: மும்பை, சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானங்கள் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க புதிய ஓடுபாதையான என்-9 என்ற புதிய ஓடுபாதை திறக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய தனியார் நிறுவனம் கடந்த சனியன்று இதனை துவங்கி வைத்தது.

முதன்மை ஓடுபாதை தளமான 09-27-இற்கு வடமேற்கு பகுதியில் இந்த புதிய ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை மூலம் விமானங்கள் தரையிறங்கி பயணிகளை இறக்கி விட்டு விரைவில் கிளம்புவதால் ஓடுபாதை நெரிசல் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஓடுபாதையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் முதன்முதலாக தரையிறங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்