நாட்டின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதினைப் பெறுவதற்கு பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி (வயது 86) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
webdunia photo
FILE
இசைக்கலைஞருக்கு பாரத் ரத்னா விருது 7 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கிறது. இதற்கு முன் ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பாட்டுக் கலைஞரான பீம்சென் ஜோஷி தனது 19ஆவது வயதில் இசைப்பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 70 ஆண்டுகளாக கலைப்பயணத்தைத் தொடர்ந்து மேற்கோண்டு வருகிறார்.
பீம்சென் ஜோஷிக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
பீம்சென் ஜோஷிக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தில் பிறந்த பீம்சென், கடந்த 1972ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 1985ஆம் ஆண்டில் பத்மபூஷன், 1991ஆம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.