மண்ணின் மைந்தர் கொள்கை: காங்கிரஸ் ஆதரவு!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:31 IST)
மராட்டியத்தில் மராத்தியர்களுக்குத்தான் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ராஜ் தாக்ரேயின் கருத்திற்கு தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளது.

‘மராத்தி மனுஸ்’ என்ற மஹராஷ்ட்ர நவ நிர்மாண் சங்கின் கோரிக்கைக்கு காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியி்ன் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் அஹமது, “சில விடயங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்பதில் தவறில்லை, ஆனால் வன்முறையை ஏற்க முடியாது” என்று கூறினார்.

வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவரும் ராஜ் தாக்ரே மீது அம்மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா என்று கேட்டதற்கு, அது தொடர்பாக முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக்கிற்கு பிரதமர் மன்மோகன் சிங் மிகக் கடுமையான கடிதத்தை எழுதியுள்ளார் என்று பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்