தேசிய அளவில் புதிய கூட்டணி: யெச்சூரி!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (01:10 IST)
தேசிய அளவில் மூன்றாவது அணியின் அடித்தளம் மதச்சார்பின்மைதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்.

டெல்லியில் திங்களன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருமாறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைகள், தொடர் குண்டு வெடிப்புகள் உள்ளிட்டவற்றை யெச்சூரி சுட்டிக்காட்டினார்.

சமூக ஒற்றுமை, தீவிரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இடதுசாரிக் கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்ட புதிய கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்