அஸ்ஸாம் குண்டு வெடிப்பிற்கு எல்லைத் தாண்டிய பயங்கரவாதமே காரணம்: கோகாய்!

திங்கள், 3 நவம்பர் 2008 (09:38 IST)
அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு இந்தியாவின் எல்லைக்கு அப்பால் இருந்து நுழைந்த பயங்கரவாதமே காரணம் என்று அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

குவஹாத்தியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கோகாய், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த விரும்பும் சக்திகள் அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

“இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான சக்திகள் யார் என்ற விசாரணையில் சந்தேகக் குறி எல்லைக்கு அப்பால் உள்ளதாகவே காட்டுகிறது, அதனை அடையாளம் காண மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று கோகாய் கூறியாள்ளார்.

அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 79ஐ எட்டியுள்ளது என்றும் கோகாய் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்