அ‌ஸ்ஸாம் குண்டு வெடிப்பு பலி எ‌ண்‌ணி‌க்கை 81 ஆனது!

சனி, 1 நவம்பர் 2008 (22:47 IST)
அ‌ஸ்ஸாம் மாநில தலைநகர் குவகாத்தி உ‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியோனோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்து‌ள்ளது.

குண்டு வெடிப்பில் காயமடைந்து குவகாத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், பசிஸ்தா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரும் நேற்று இறந்தனர்.

வர்கள் தவிர, மேலும் 20 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் மாநில அரசு தயாராக இருக்கிறது. அவர்களின் சிகிச்சை செலவுகளையும் அ‌ஸ்ஸாம் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும்.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்