அஸ்ஸாமில் நடந்த தொடர்பு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக குவகாத்தியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு செல்பேசி மூலம் எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது.
அதில், தொடர் குண்டு வெடிப்புக்கு 'இஸ்லாமிய பாதுகாப்பு படை- இந்தியன் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பு ஏற்பதாகவும், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பப்பட்ட செல்பேசி நம்பர் நாகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபாரி என்ற இடத்தில் நசீர் அகமது என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜுல்பிகர் அலி என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மொய்ராபாரி பகுதியைச் சேர்ந்த இவருடைய இருசக்கர வாகனம் பான்பஜார் பகுதி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.