விஸ்வநாதன் ஆனந்திற்கு பிரதீபா, சோம்நாத் வாழ்த்து!

வியாழன், 30 அக்டோபர் 2008 (17:20 IST)
ஜெர்மனியின் பான் நகரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்யாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரத் தலைவர் பிரதீபா வெளியிட்டுள்ள செய்தியில், தனது நீண்ட செஸ் விளையாட்டு வாழ்வில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆனந்த், தற்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றி, செஸ் போன்றதொரு சவாலான விளையாட்டின் மீது ஆனந்த் செலுத்தி வரும் கவனமும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும் என பிரதீபா கூறியுள்ளார்.

இதேபோல், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்