நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு விட்டது: எடியூரப்பா!
புதன், 29 அக்டோபர் 2008 (01:04 IST)
''காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி இந்த வருடம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்து விடவேண்டிய தண்ணீர் முழுவதும் விடப்பட்டு விட்டது'' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.
PTI Photo
FILE
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து இருக்கிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன என்றார்.
கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க வேண்டும், ஐதராபாத், கர்நாடக பகுதிக்கு 317-வது விதியை திருத்தி சிறப்பு வாய்ப்புகளை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உள்பட மாநிலத்தின் மற்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வருகிற 4ஆம் தேதி அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறிய எடியூரப்பா, இந்த கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் கூறுகையில், வருகிற 4ஆம் தேதி விதான்சவுதாவில் அத்வானி வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது என்று தெரிவித்தார்.