‌பீகா‌ரி‌ல் முழு அடை‌ப்பு : மாணவ‌ர்க‌ள் கலவர‌ம்!

சனி, 25 அக்டோபர் 2008 (18:34 IST)
பீகா‌ரி‌ல் இ‌ன்று நட‌ந்த முழு கடையடை‌ப்‌பி‌ன் போது ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் புகு‌ந்து மாணவ‌ர்க‌ள் ர‌யி‌‌ல்வே சொ‌த்து‌க்க‌ள் ‌மீது தா‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

மாரா‌ட்டிய மா‌நில‌த்‌தி‌ல் ர‌யி‌ல்வே‌த் தே‌ர்வு எழு‌த வ‌ந்த மாணவ‌ர்க‌ள் ‌மீது மகாரா‌ஷ்டிரா நவ ‌நி‌ர்மா‌ண் சேனா தொ‌ண்ட‌ர்க‌ள் தே‌ர்‌வு மைய‌ங்க‌ளு‌க்கு‌ள் நுழை‌ந்து க‌ண்மூடி‌த்தனமாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி‌‌ன‌ர். இ‌தி‌ல் ‌பீகா‌ர் மா‌நில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஒரு மாணவ‌ர் ப‌லியான‌ா‌ர்.

இ‌ந்த தா‌க்குத‌ல் தொட‌ர்பாக எ‌ம்.எ‌ன்.எ‌ஸ். தலைவ‌ர் ரா‌ஜ்தா‌க்ரே ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க ம‌த்‌திய அரசு தவ‌றி‌வி‌ட்டதாக கூ‌றி அனை‌த்‌தி‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் ‌‌விடு‌க்க‌ப்‌ட்டு‌ள்ள இ‌ந்த முழு அடை‌ப்பு இ‌ன்று காலை 6 ம‌ணி‌க்கு துவ‌ங்‌‌கியது.

த‌ர்பா‌ங்கா ர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு செ‌ன்ற 100‌0‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாணவ‌‌‌ர்க‌ள் மாகாரா‌ஷ்டிரா நவ‌ ‌நி‌ர்மா‌ண் சேனா தலைவ‌ர் ரா‌ஜ்தா‌க்ரே‌க்கு எ‌திராக கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.

பி‌ன்ன‌ர் ர‌யி‌ல் நுழைய‌த்து‌க்கு‌ள் புகு‌ந்து ‌நிலைய அ‌திகா‌ரி‌யி‌ன் அறை, பயண‌ச் ‌சீ‌ட்டு வழ‌ங்கு‌ம் இட‌‌ம், நடைமேடை கூறைகளை அடி‌த்து நொறு‌க்‌கியதோடு ர‌யி‌ல்வே சொ‌த்து‌க்களை ‌‌தீவை‌த்து‌க் கொளு‌த்த மு‌ய‌ன்றன‌ர்.

ஆனா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ச‌ரியான நேர‌த்‌தி‌ல் தலை‌யி‌ட்டு அவ‌ர்களை‌த் தடு‌த்து ‌‌நிறு‌த்‌தின‌ர். ம‌றிய‌ல், கலவர‌ங்க‌ளி‌ல் ஈடுப‌ட்ட 20 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்