செ‌ல்பே‌சி கட்டணங்க‌ள் குறைக்க பரிசீலனை : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (18:04 IST)
தற்போதுள்ள கட்டணத்தையும், ‌வியாபார போக்குவரத்தையும் கணக்கில் கொண்டு மொபைல் டெர்மினேசன் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு தொலைத் தொடர்புத் துறை (DoT), இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (டிராய்) கேட்டுக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில், மத்திய தொலைத் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்திய சிந்தியா இன்று இத்தகவலை தெரிவித்தார்.

உள்ளூர், தேசிய அளவில் நீண்டதூர, சர்வதேச நீண்டதூர அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசா என்ற அளவில் டெர்மினேசன் கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.

இதனை மாற்றியமைப்பதை பரிசீலிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை, டிராயை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவாக கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரைக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்