பீகாரில் டெல்லி-பாஹல்பூர் ரயிலுக்கு தீவைப்பு!

புதன், 22 அக்டோபர் 2008 (12:17 IST)
பீகார் மாநிலம் குர்ஸோபூர் பகுதியில் டெல்லி - பாஹல்பூர் ரயிலின் 5 பெட்டிகளுக்கு சிலர் இன்று தீவைத்தனர்.

இந்த தீவைப்பு சம்பவத்தில் 5 பெட்டிகளும் கருகியதாகவும், உயிரிழப்பு குறித்து தகவல் ஏதுமில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் கடந்த ஞாயிறன்று ரயில்வே வாரியத் தேர்வு எழுத வந்தவர்கள் மீது மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பீகார் மாநிலம் நாலந்தாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பீகார் மாநிலத்தில் சிலர் இந்த கலவரத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்