வருமானவரி தாக்கல் செய்யாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:19 IST)
நாடு முழுவதும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்களின் விவரங்களை வருமான வரித்துறை சேகரித்து வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், வங்கிகள், பதிவுத் துறை அலுவலகங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் வாயிலாக நிதிப் பரிவர்த்தனை செய்வோர் பற்றிய விவரங்களை வருமான வரித் துறை சேகரித்துள்ளதாகக் கூறினார்.
வருமான வரித் துறையின் மத்திய தகவல் பிரிவு அதுபற்றிய தவல்களை சேகரித்துள்ளது. இவற்றின் மூலமாக வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதவர்களை அடையாளம் காண முடியும் என்றும் பழனி மாணிக்கம் மேலும் கூறினார்.