மும்பையில் வாழும் வட இந்தியர்கள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி துப்பாக்கிச் சூடு குறித்த புதிய தகவல் போன்ற பிரச்சனைகள் மக்களவையில் இன்று காலை எதிரொலித்ததைத் தொடர்ந்து, நண்பகல்வரை அவை தள்ளிவைக்கப்பட்டது.
இதே பிரச்சனை மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டதால், கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டு, நாளை காலை வரை மாநிலங்களவை தள்ளி வைக்கப்பட்டது.