ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது.
மக்களவைக் கூட்டத்தை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி துவக்கினார். முதலில் மறைந்த மக்களவை முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மக்களவை நடவடிக்கைகள் திங்கட்கிழமை காலை வரை தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இன்று துவங்கிய மாநிலங்களவைக் கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம், ஒரிசா, கர்நாடக மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் அறிவித்தார்.