தாஷ்முன்ஷி உடல்நிலை சீராக உள்ளது: எய்ம்ஸ் மருத்துவர்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (11:40 IST)
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையின் (எய்ம்ஸ்) இருதய சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் வி.கே.பெல் கூறுகையில், தாஸ்முன்ஷியின் உடல்நிலை சீராக இருந்தாலும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

அமைச்சருக்கு துவக்கத்தில் வைக்கப்பட்ட செயற்கை சுவாசம் நீக்கப்பட்டதுடன், அவரது இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு, சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாடு உள்ளிட்ட இதர மருத்துவ நிலைகளும் சீராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இருதய பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த திங்களன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்