ரிலையனஸ் செல்போன் அழைப்புக் கட்டணம் குறைப்பு!

புதன், 15 அக்டோபர் 2008 (18:45 IST)
அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது உள்ளூர், எஸ்.டி.டி. கட்டணங்களை குறைத்துள்ளது. இதன்படி உள்ளூர் அழைப்புகளுக்கு 50 காசுகளும், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லைஃப் டைம் ஜாது பேக் (Lifetime Jaadu Pack) திட்டத்தின் கீழ் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.550 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் ஆயுள் முழுவதும் மேற்கூறப்பட்ட கட்டண விகிதத்தில் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளை பேசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதே வசதியைப் பெற விரும்பும் போஸ்ட்-பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.49 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படும் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்