பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க கோரிக்கை!

புதன், 15 அக்டோபர் 2008 (00:28 IST)
பன்னாட்டு கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக குறைக்குமாறு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

பன்னாட்டு கச்சா விலை பீப்பாய் ஒன்றிற்கு 120 டாலர்களை எட்டியபோது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை முறையே லிட்டருக்கு ரூ.4, ரூ.2 என்று அதிகரித்தது.

தற்போது கச்சா விலை பீப்பாய்க்கு 80 டாலர்களாக குறைந்துள்ளது, இதனால் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதன் மூலம் விலைவாசிகள் குறையும் இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்