அஸ்ஸாம் மாநிலம் தூப்ரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாஸ்பரி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.