கர்நாடகாவில் பருவ மழை தீவிரம்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (20:18 IST)
தென் மேற்கு பருவ தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கர்நாடகாவின் பெரும்பாலான கரையோரப் பகுதிகளிலும், கர்நாடகாவின் உட்பகுதிகளிலும், கேரளத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது!

தட்சினா கன்னட மாவட்டத்தின் குந்தாபுரா பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளிலும், கேரளாவின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம்,

தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

சில இடங்களில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடனும், மாலையிலோ இரவிலோ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்