காற்றழுத்த தாழ்வு நிலை ‌தீ‌விர‌‌ம்!

புதன், 17 செப்டம்பர் 2008 (20:40 IST)
வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒரிசா மாநிலம் கட்டாக் அருகே மையம் கொண்டுள்ளது!

இது மேலும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 12 மணி நேரத்திற்கு ஒரிசா, மேற்கு வங்கத்தின் கரையோரப் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலிற்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவின் வடக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்