வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து இன்று கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரிசா கரையோரப் பகுதி சண்டபாலியில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் அட்ச ரேசை 20.5 டிகிரி வடக்கும், தீர்க்க ரேகை 87.5 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து, சண்டபாலி அருகே இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகாவின் வடக்கு பகுதிகளிலும், தெலுங்கானா, ஆந்திராவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கு கரையோரப் பகுதிகளிலும், தெலுங்கானா, மற்றும் கர்நாடகாவின் கரையோரப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.