குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் சம்பளம் உயர்வு!
வியாழன், 11 செப்டம்பர் 2008 (16:47 IST)
இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோருக்கான சம்பளத்தை உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் மாதந்திர சம்பளத்தை 1.50 லட்சமாக உயர்த்த அக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபால், குடியரசு துணைத் தலைவருக்கான சம்பளத்தை 1.25 லட்சமாக அதிகரிக்கவும், மாநில ஆளுநர்களுக்கான சம்பளத்தை 1.10 லட்சமாக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு, குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.50,000 சம்பளம் ரூ.1,00,000 ஆகவும், குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.40,000 சம்பளம் ரூ.85,000 ஆகவும், மாநில ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.36,000 சம்பளம் ரூ.75,000 ஆகவும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.