ரூபாயின் பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (20:19 IST)
காய்கறிகள், இறைச்சி, சிமெண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால், தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த ரூபாயின் பணவீக்கம் ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.40 விழுக்காடாக குறைந்துள்ளது.

இது பணவீக்கம் தொடர்ந்து குறையப் போவதற்கான ஆரம்ப அறிகுறி என்று கூறியுள்ள நிதி அமைச்சக அறிக்கை, அத்யாவசியப் பொருட்களின் பட்டியலில் உள்ள 98 பொருட்களில் 21 பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது, 48 பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை, மீதமுள்ள 29 பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 3.99 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகள் மட்டுமின்றி, முட்டை, மீன், எரிபொருள் ஆகியவற்றின் விலைகளும் 1 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது.

பருப்பு வகைகள், பழங்கள், மசாலா பொருட்கள், எஃகு மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்