ர‌யி‌ல்வே வருவா‌ய் அ‌திக‌ரி‌‌ப்பு!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:19 IST)
இ‌ந்மாதம் முதல் 10 நா‌ட்க‌ளி‌லரயில்வேத் துறை ரூ.1,988 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.1,664.75 கோடியாகும். கடந்த ஆண்டைவிட வருவாய் 19.46 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த மாதம் முதல் 10 நாட்களில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.1,332.04 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு வருவாயுடன் (ரூ.1,131.93 கோடி) ஒப்பிடும் போது இது 17.68 விழுக்காடு கூடுதலாகும். ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக இ‌ந்மாதம் முத‌ல் 10 வரையிலான நாட்களில் ரூ.592.76 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வருவாயைவிட இது 25.11 விழுக்காடு அதிகமாகும்.

இ‌ந்மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 19 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்தனர். செ‌ன்ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 17 கோடி மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்