மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பி.கே.மிஸ்ரா பொறுப்பேற்பு!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:27 IST)
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பிரசாந்த குமார் மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தேர்வாணையத்தின் தலைவர் பேராசிரியர் டி.ி. அகர்வால் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

மிஸ்ரா இந்திய ஆட்சி பணியின் 1972-ம் ஆண்டு அணியைச் சார்ந்த உத்தரபிரதேச மாநில அதிகாரி ஆவார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலரும் ஆவார்.

நேரு யுவ கேந்திரா சங்கதனின் தலைமை இயக்குனர், பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர், சிவில் ஏவியேஷன் அமைச்சகத்தின் நிதி ஆலோசகர் மற்றும் சிறப்புச் செயலர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் செயலர், ஆட்சி மொழி அமலாக்கத் துறையின் செயலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்