சி. ரெங்கராஜன் எம்.பி.யாக பதவி ஏற்பு!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (15:49 IST)
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவுக்கு தலைவராக இருந்த சி. ரெங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இவர் சென்ற வாரம் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சி. ரெங்கராஜன், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சி. ரெங்கராஜனையும் சேர்த்து, இப்போது மூன்று ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநிலங்களை உறுப்பினர்களாக உள்ளனர்.

அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும், ரிசர்வ் வங்கி கவனர்னராக பணியாற்றி உள்ளார்.

இதேபோல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலானும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணாவை,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க, காங்கிரஸ் மேலிடம் சட்டமன்ற தேர்தல் களத்தில் இறக்கியது. இதற்காக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை விட்டு விலகினார்.

கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.

இதனால் எஸ்.எம் கிருஷ்ணா, இந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்