லஞ்சப் புகாரா? எஸ்எம்எஸ் போதும்!

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 (15:43 IST)
மத்திய அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களை செல்பேசி குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கலாம் என்று மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) அறிவித்துள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 49224 என்ற எண்ணுக்கு, குறுந்தகவல்களை அனுப்பலாம் என்று ம.பு.க. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மீதான புகார்களை 044௨ - 8255899 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று, ம.பு.க. அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேருக்கு ம.பு.க. சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்