அமர்நாத் யாத்திரைப் பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

வியாழன், 31 ஜூலை 2008 (13:52 IST)
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து அமர்நாத் பு‌னித‌த் தல‌த்‌தி‌ற்கு‌ யாத்திரை செல்லும் பாதை‌யி‌ல் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

பெங்களூரு, அமகதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து பல இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து அமர்நாத் புனிதத் தலத்திற்கு செல்லும் பாதை‌யி‌ல் 1.5 கிலோ எடைகொண்ட வெடிகுண்டை இ‌ன்று மத்திய கூடுதல் காவற்படை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அமர்நாத் புனித யாத்திரை செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்