மத்திய அமைச்சர் சரத்பவார் சென்ற தனியார் விமானம் திடீர் கோளாறு காரணமாக அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்லும் போயிங் விமானத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் அமைச்சர் சரத்பவார் பயணம் செய்தார்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து விமானத்தை உடனடியாக மீண்டும் டெல்லிக்கு திருப்ப முடிவு செய்த விமானிகள், அதற்கான விமான நிலைய உத்தரவு கிடைத்ததும் விமானத்தை தரையிறக்கினர்.
விசாரணையில் விமானத்தின் கதவு சரியாக மூடப்படாததே காரணம் எனத் தெரியவந்தது. விமானத்தில் உள்ள கோளாறு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால், அமைச்சர் பவார் தப்பியதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.