சென்னை-அனந்தபூர் சாலையை மேம்படுத்த ரூ.13 கோடி அனுமதி!

வெள்ளி, 25 ஜூலை 2008 (19:04 IST)
சென்னை-ஆந்திர மாநிலம் அனந்தபூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை ரூ.13 கோடி செலவில் மேம்படுத்த மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி வழங்கியு‌ள்ளா‌ர்.

தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.205) இரு மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. புட்டபர்த்தி, தாடிபத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலையாகவும் இது பயன்பட்டு வருகிறது.

அனந்தபூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை எ‌‌ண் 205 சாலையின் 10-வது கி.ீ. முதல் 17-வது கி.ீ. வரையிலான பகுதியை மேம்படுத்த ரூ.7.32 கோடியும் அதே சாலையின் 24/5-வது கி.ீ. முதல் 37-வது கி.ீ. வரையிலான பகுதியை மேம்படுத்த ரூ.5.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்